திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட கழிவு செய்யப்பட்ட 1- நான்கு சக்கர வாகனம் மற்றும் 7- இருசக்கர வாகனங்கள் என மொத்தம் எட்டு வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 04.09.2024-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் 03.09.2024-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே ரூ.2000/- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ( இருசக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% ) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.