கரூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
கரூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
கரூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காந்திகிராமம், தொழிற்பேட்டை பகுதியில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், காந்திகிராமம், ஜே ஜே கார்டன் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் வயது 24 என்பவரையும், தொழிற்பேட்டை, அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த மதன் வயது 19 என்பவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு தாந்தோணி மலை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இவர்கள் நடத்திய குற்றச் செயலை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பேரிலும், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவின்படியும், இருவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், கரூர் மாவட்டத்தில், பொது மக்களுக்கு இடையூறு செய்து, பொது அமைதி சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வெளியீட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.