கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் தீர்த்த கிணறு திறப்பு
அறநிலைய துறை ஏமாற்றம்
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் என்பது நம்பிக்கையாகும். இந்த கோவிலின் உள்பிரகாசத்தில் வடக்கு பக்கம் புனிதமான தீர்த்த கிணறு ஒன்று உள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் பழக்கமானது என கூறப்படுகிறது. இந்த தீர்த்த கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் இருந்த பிறகும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிதண்ணீராக அமைந்துஉள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அம்மனுக்கு பூஜைக்குபயன்படுத்துவதற்குரிய அனைத்து தேவைகளுக்கும் இந்த கிணற்று நீரை பயன்படுத்துவர். இந்த தீர்த்த கிணறு குப்பைகூழங்கள் விழுந்து மாசுபட்டு விடக்கூடாது என்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பி வலைகளால் மூடப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்த கிணற்றில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் உள்ள தீர்த்த கிணற்றில் அதிக அளவில் பணம் காசுகளை காணிக்கையாக கொண்டு வந்து கொட்டி வணங்கி செல்கிறார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்த்த கிணற்றுக்கு செல்லும் சுரங்க பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தீர்த்த கிணறு இன்று ( 1 -ம் தேதி) காலைதிறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் காசு எண்ணும் பணியும் தொடங்கியது. முடிவில் சில்லறை காசுகள் ஆயிரத்து 793 ரூபாய் காணிக்கை மட்டுமே காணப்பட்டது. சுமார் ஆயிரம் ஆண்டு காலமாக கிணற்றில் தங்கம், வெள்ளி போன்ற காணிக்கை குவியலாக காணப்படும் என்ற ஆளும் அரசு அதிகாரிகளின் நம்பிக்கை வீணாகி விட்டது.