நாமக்கல் : ஹோட்டல் ஸ்ரீஅஸ்வின் கிராண்ட் மூன்றாம் ஆண்டு துவக்க விழா!
ஸ்ரீ சாரா குரூப்ஸ்
நாமக்கல், உழவர் சந்தை எதிரில், பொய்யேரிக்கரை சாலையில், ஹோட்டல் ஸ்ரீ அஸ்வின் கிராண்ட்- இன் மூன்றாம் ஆண்டு துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.ஸ்ரீ சாரா குரூப்ஸ் & ஸ்ரீஅஸ்வின் கிராண்ட் நிறுவன தலைவர் ஸ்ரீதேவி மோகன் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி அவர் பேசுகையில்...கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிற வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மற்றும் பணிப்புரியும் அனைத்து அலுவலக நண்பர்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். விழாவில் அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள் நண்பர்கள் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். நாமக்கல் ஹோட்டல் ஸ்ரீ அஸ்வின் கிராண்ட் முழுவதும் ஏர் கண்டிஷனர் வசதியுடன், ஒவ்வொரு அறையிலும் 32" எல்இடி டிவி போன்ற வசதிகள் உள்ளன. 24 மணி நேரமும் ஆடம்பரமான சேவைகளை வழங்குகிறது. நாமக்கல் நகரத்தின் ஒரு முக்கிய இடத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஸ்ரீ அஸ்வின் கிராண்ட் ஒன்றாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.