பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது
சாத்தான்குளம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் சிவசக்தி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சூப்பர்வைசர் விஜய் மற்றும் முத்துக்கண்ணன் ஆகிய 2 பேர் உடல் கருகி இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் விசாரணை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையல், பட்டாசு ஆலை உரிமையாளரான நாசரேத் வாழையடி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் ராம்குமார் (40) என்பவரை கைது செய்துள்ளனர்.