கந்தர்வகோட்டை: மதுரை மாவட்டம் மேலுார் அருகே உள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (33). இவர் பிளாஸ்டிக் வயரால் பின்னப்பட்ட கட்டிலை இருசக்கர வாகனத்தில் வைத்து ஊர், ஊராக சென்று விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் கந்தர்வகோட்டை பகுதிக்கு வந்த அவர் தஞ்சை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் படுத்து உறங்கினார். காலையில் பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார். இதுபற்றி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.