திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் வேத மாணிக்கம் சேம்ஜி தலைமையிலான காவல் துறையினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஏர்வாடி அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஏர்வாடி, LNSபுரத்தை சேர்ந்த அப்துல் ரஹீம் (23), சேக் மன்சூர் (21), முகமது இர்பான் (24) ஆகிய மூவரையும் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய 30 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் மூவரையும் ஏர்வாடி காவல் நிலையம் அழைத்து வந்தார். இதுகுறித்து ஏர்வாடி காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்துல் ரஹீம், சேக் மன்சூர், முகமது இர்பான் ஆகிய மூவரையும் இன்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 30 கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.