விராலிமலை: விராலிமலை ஒன்றியம் மதயா னைப்பட்டி, வில்லாரோடை,கல்லுப்பட்டி, கலி மங்கலம், ஆவூர், கோலார்பட்டி ஆகிய கிராமங் களை ஒட்டியுள்ள கோரையாற்று பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர், சரக்கு வாகனம் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தப்படுவ தாக வருவாய்த் துறையினர் மற்றும் மாத்தூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீ சார் நேற்று அதிகாலை அந்த பகுதிகளில் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதயா னைப்பட்டி அருகே கோரையாற்றில் இருந்து வந்த ஒரு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டபோது, அனுமதியின்றி மணல் கடத்தி சென் றது தெரியவந்தது. இதையத்து வாகனத்தை பறிமு தல் செய்த போலீசார், குருநாதன்பட்டியை சேர்ந்த மதலைமுத்து (26) என்பவரை கைது செய்து கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.