திருப்பத்தூர் அருகே திடீர் சாலை மறியல் போலீசார் விசாரணை

திருப்பத்தூர் அருகே திடீரென சாலை மறியல் ஈடுபட்ட தனி நபர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு போலீசார் விசாரணை.

Update: 2024-09-02 10:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே திடீரென சாலை மறியல் ஈடுபட்ட தனி நபர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு போலீசார் விசாரணை. திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜான் மூர்த்தி என்பவர் கடந்த1970 ஆம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவ குல கண் மருத்துவமனை வைத்து நடத்தி வந்துள்ளார் இந்த மருத்துவமனைக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜான் மூர்த்தி இறந்துவிட்டார். அதனைதொடர்ந்து அவருடைய மகள்கள் ஷீலா (54 ) ஜெரியா ஆக்கின்ஸ் லீனா (50) மற்றும் மகன் பிரதாப் சிங் (52) ஆகியோர் அந்த இடத்தை பராமரித்து வந்துள்ளனர். மேலும் ஜான் மூர்த்தியின் மறைவிற்கு பின்னர் அங்கு கண் மருத்துவமனை செயல்படாததால் அந்த குடோன் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதில் நான்கு பேர் கடை வாடகைக்கு எடுத்து பாஞ்சாலி என்பவர் உரக்கடை வைத்துள்ளார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் அருணகிரி கோணிப்பை சேமிப்பு குடோன் வைத்துள்ளார். மேலும் தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை வைத்து நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது உஷா என்பவர் ஆவின்பால் கடை வைப்பதற்காக அந்த குடோனில் கடை ஒன்று வாடகைக்கு எடுத்துள்ளார். அதற்கான பணத்தை ஷீலாவிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அங்கு ஆவின்பால் கடை வைக்ககூடாது என ஏற்கனவே வாடகைக்கு உள்ள நபர்கள் பிரச்சனை செய்வதாகவும் மேலும் செல்வகுமார் என்பவர் அந்த இடம் தனக்கு சொந்தமானது என கூறி பிரச்சனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜான் மூர்த்தியின் இரண்டு மகள்கள் மற்றும் மகன் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஆவின்பால் கடை ஏன் வைக்கக்கூடாது என கேட்டு திடீரென திருப்பத்தூரில் இருந்து ஆலாங்காயம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த கிராமிய காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர் மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News