திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது
திண்டுக்கல்லில் முதல்முறையாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி பழனி ரோடு தனியார் விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது
கோல்டன் லோட்டஸ் பவுண்டேஷன் அன்பே கடவுள் அறக்கட்டளை சார்பில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் திண்டுக்கல் பழனி ரோடு தனியார் தங்கும் விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், மதுரை ,கரூர், திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகள் 15 பேர் கலந்து கொண்டனர். நடையழகு, உடை அழகு, பொது அறிவு வினா விடை ஆகியவற்றின் அடிப்படையில் முதல் மூன்று திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் சிறந்த அழகியாக தேனியை சேர்ந்த ஹேமா முதல் பரிசு பெற்று மிஸ் திண்டுக்கல் டிரான்ஸ் குயின் பட்டம் பெற்றார். தேனியைச் சேர்ந்த சுருதி இரண்டாவதாக மூன்றாவதாக தேனியை சேர்ந்த தீக்ஷனா ஆகியோருக்கு கோப்பைகள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு தலையில் கிரீடம் வைத்து வெற்றி அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கையர் மற்றும் பலர் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு ரசித்தனர். மேலும் போட்டிகளை உற்சாகப்படுத்தும் வகையில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.