உடுமலை மளிகை கடையில் நூதன திருட்டு !!

சிசிடிவி காட்சிகள் வைரல்

Update: 2024-09-02 11:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் வீதியில் அத்தியாவசிய மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை கடைகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது.கடைகளுக்கு வருகை தருகின்ற பல்வேறு விதமான பொருட்களை அதன் உரிமையாளர்கள் வெளியில் இறக்கி வைத்து சரி பார்த்து கடைக்குள் எடுத்து வைப்பது வாடிக்கையான நிகழ்வாகும்.அந்த வகையில் சத்திரம் வீதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பல சரக்கு பொருட்கள் வந்தது. அவற்றை சரி பார்ப்பதற்காக கடை உரிமையாளர் இறக்கி வைத்திருந்தார்.மேலும் அந்த கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உரிமையாளரும் பணியாளரும் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர்.இதை நோட்டமிட்ட ஆசாமிகள் இருவர் கடையில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியை திருடுவதற்கு திட்டம் போட்டனர். முதலில் ஒரு ஆசாமி மளிகை கடைக்கு அருகில் உள்ள பேன்சி கடைக்கு வருகை தருகிறார்.அதைத் தொடர்ந்து செல்போனில் பேசுவதுபோல் நடித்து மளிகை கடைக்கு வந்த பெட்டியை எடுத்து பேன்சி கடைக்கு முன்பு வைத்து திருடுவதற்கு தயார் படுத்துகிறார்.அதைத் தொடர்ந்து மற்றொரு ஆசாமியை அழைக்கிறார்.அவர் வந்தவுடன் பேன்சி கடைக்குள் சென்று பேனா வாங்கியவாறு கடைக்காரருடன் பேச்சு கொடுக்கிறார்.இதை சாதகமாக கொண்டு மற்றொரு ஆசாமி பலசரக்கு பெட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.இந்த நிகழ்வு அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.திருடப்பட்ட பெட்டியில் சுமார் 8 ஆயிரம் மதிப்புள்ள சூடம் மற்றும் பெருங்காய டப்பாக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மளிகை கடையில் நூதன முறையில் திருட்டு நடந்த வீடியோ உடுமலை பகுதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே உடுமலை பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Similar News