தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பேரணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பேரணியை துவக்கி வைத்தார்.

Update: 2024-09-02 11:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர். கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு சிறப்பு தலைப்பில் தேசிய ஊட்டசத்து மாத விழா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில். ஏற்பாடு செய்யப்பட்ட ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழாவை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் துவங்கி வைத்தார். பின்னர் சத்தான உணவு, சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான நேரத்தில் தவறாமல் உண்போம் என்ற உறுதி மொழியோடு நடைபெற்ற பேரணியும் மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து  துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று ஊட்டச்சத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். மேலும் ஊட்டச்சத்து கண்காட்சியில் பாரம்பரிய சிறுதானியங்கள் கொண்டு 50 உணவு வகைகள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் இணை உணவு மாவு கொண்டு செய்யப்பட்ட 50 உணவு வகைகள் என மொத்தம் 100 உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர்.மகாலட்சுமி சங்கீதா, திருப்பூர் ரோட்டரி பாரதி கிளப் தலைவர். கிருத்திகா தங்கராஜ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News