கரூரில்,கந்து வட்டி கொடுமை வழக்கில் கைதான கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கரூரில்,கந்து வட்டி கொடுமை வழக்கில் கைதான கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-09-02 12:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில்,கந்து வட்டி கொடுமை வழக்கில் கைதான கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி பதிவான கந்துவட்டி கொடுமை வழக்கில், கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, பாலவிடுதி அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் திருவேங்கடம் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு பாலவிடுதி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் மீது குண்டர் சட்டத்தில் அடைக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். பரிந்துரையின் பேரில், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கைதான திருவேங்கடத்தை குண்டத்தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இன்று திருவேங்கடத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரியை குண்டர்தடுப்பு சட்டத்தில் அடைத்த குளித்தலை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் மற்றும் பாலவிடுதி காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் அதிகப்படியான வட்டிகளுக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எச்சரித்துள்ளார்.

Similar News