திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடியை சேர்ந்த முருகன் (35), வள்ளியூரை சேர்ந்த அஜித்குமார் (24) ஆ.திருமலாபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (34) தேவர் குளத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (45) சீவலப்பேரியை சேர்ந்த முத்துராஜா (20) ஆகியோர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் எஸ் பி சிலம்பரசன் பரிந்துரையின் படி கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவை தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.