கீரனுார்: வத்தனாக்கோட்டை அருகே உள்ள சின்ன ஊரணிபட்டியை சேர்ந்தவர் பெரிய சகாயராஜ் (43). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. சம்பவத் தன்று மது அருந்திவிட்டு கிராமத்தில் உள்ள குளக்க ரையில் படுத்து உறங்கினார். அப்போது போதையில் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்த அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.