சத்தியில் தரையை பார்க்கும் கண்காணிப்பு கேமரா
சத்தியில் தரையை பார்க்கும் கண்காணிப்பு கேமரா
சத்தியில் தரையை பார்க்கும் கண்காணிப்பு கேமரா சத்தியில் தரையை நோக்கி தொங்கும் கண்காணிப்பு கேமராவை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் காணும் வகையிலும், குற்றவாளிகள் தப்பி செல்வதை கண்காணிக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து கேமராக்களும் பஸ்நிலை வளாகத்தில் உள்ள கன்ரோல் ரூம் மூலம் கண்கானிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே நகரின் மையப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா முறையாக பராமரிப்பு செய்யாததால் தரையை பார்த்து தொங்கியபடி உள்ளது. மேலும், இங்கு வாகன சோதனைகள் தினமும் நடைபெற்று வருகிறது. முக்கியமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கேமரா இப்படி தரையை நோக்கி இருப்பதால் அப்பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். மேலும், இது போல் நகரில் உள்ள கன்காணிப்பு கேமராக்கள் பழுது ஏற்பட்டிருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.