மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கூறி வாரிய அலுவலர் என்ற பெயரில் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு போதிய படிப்பறிவு இல்லாத பெற்றோர்களிடம் வங்கி கணக்கு எண்ணை பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. எனவே அனைத்து பள்ளிகளிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி குழந்தைகளிடம் காலை இறை வணக்க கூட்டத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் தெரிவித்துள்ளார்.