மீனவ மக்களுக்கு நலதிட்ட உதவிகள்
தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் கோவில் அன்னதானம் நிதியுதவி மற்றும் மீனவ மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்ட்டது.
தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் சிஎஸ்ஆர் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் மீனவர் நல ஒருங்கிணைந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு டிபன் பாக்ஸ்கள் வழங்கப்பட்டது. நலதிட்ட உதவிகளை ஸ்பிக் நிர்வாக முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ், பணிமய மாதா கோவில் பங்குச் செயலாளரும் மாவட்ட நுகர்வு கூட்டுறவு பண்டகசாலை சங்க தலைவருமான எட்வின் பாண்டியனிடம் வழங்கினார். மேலும், தங்கம்மாள்புரம் பத்திரகாளியம்மன் கோவில், மற்றும் தங்கமணி நகர் ஸ்ரீசந்தனமாரியம்மன் கோவில் கொடை விழாவில் அன்னதானம் நடத்த நிதியுதவி வழங்ப்பட்டது. விழாவில், ஸ்பிக் முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ், முதுநிலை அலுவலர் சரவணன், மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.