இந்தியாவில் நிலையான சித்தாந்தம், கொள்கை வைத்து செயல்படும் ஒரே கட்சி பாஜக - கே.பி.இராமலிங்கம்

இந்தியாவில் நிலையான சித்தாந்தம், கொள்கை வைத்து செயல்படும் ஒரே கட்சியாக பாஜக வலிமையாக திகழ்ந்து வருகிறது என்று பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-03 11:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக துணை தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்.....தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் உறுப்பினர் சேர்க்கை எதற்காக நடத்தப்படுகிறது என கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் நிலையான சித்தாந்தம், கொள்கை வைத்து செயல்படும் ஒரே கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட இயக்கத்தை வலிமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த பணியை 3 மாதம் காலத்திற்கு செய்ய உள்ளோம்... ஒரு லட்சம் இளைஞர்களை நாட்டை வழிநடத்தும் இளம் தலைவர்களாக உருவாக்க வேண்டும், அவர்கள் இதற்கு முன்பு எந்த ஒரு அரசியல் பின்புலம் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் உறுப்பினர் சேர்க்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பாஜகவில் யார் வேண்டுமானாலும் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் ஆகலாம். உதயநிதி ஸ்டாலின் கூட இதில் உறுப்பினராகலாம். மத்திய அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கையை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மூன்றாவது மொழி இந்தி தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, என்ன மொழி வேண்டுமானாலும் கற்கலாம். இதுகுறித்து பெற்றோர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், மாநில பாடத்திட்டத்தை தெரிந்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனரவா...? அவர்களது 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வெளியிட முடியுமா..? முதல்வரின் வீட்டு வேலை செய்தவர்களுக்கு அமைச்சர் மற்றும் எம்.பி பதவி கொடுத்துள்ளனர். அதனால் அவர்களுக்கு கல்வி பற்றி தெரியாது. கலைஞர் கருணாநிதியே புதிய பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா..? அரசாணையை கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். தமிழராய் இல்லாத எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்துக்கு பதில் அளித்து பேசுகையில்.... சீமான் முதிர்ச்சியடைந்த தலைவர் போல பேசவேண்டும், மத்திய அமைச்சர் எல்.முருகனின் சாதி குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். முதலில் சீமான் தமிழரே கிடையாது. தமிழை மட்டும் பேசுபவர்கள் எப்படி தமிழர்களாக முடியும், அப்படி பார்த்தால் பெரியார் தமிழரே கிடையாது, அவர் படத்தை ஏன் பயன்படுத்த வேண்டும், இதுபோன்று பேச வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் என தெரிவித்தார்.

Similar News