திருமயம் அடுத்த பனையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நாய்கடி ஊசி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அங்கு தடுப்பூசி இல்லாததால் திருமயம் அல்லது நற்சாந்து பட்டிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதார துறை ஆய்வாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பனையபட்டி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.