சாகர் கவாஜ் ஒத்திகை: கடலோர பாதுகாப்பு படை!
தூத்துக்குடி கடல் பகுதியில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் வகையில் நடைபெறும் சாகர் கவாஜ் ஒத்திகை இன்று காலை 8 மணிக்கு துவங்கி நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படை கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் சுங்க இலாகாவினர் மீன்வளத்துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்
மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர் இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாஜ் கடல் ஒத்திகை நடத்தப்படும் இந்நிலையில் இன்று காலை 8:00 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை கடல் பகுதி வழியாக அந்நிய நபர்கள் யாரேனும் ஊடுருவுகிறார்களா என்பது குறித்த ஒத்திகை துவங்கி நடைபெற்று வருகிறது இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படையினர் ,கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், சுங்க இலாகாவினர், மீன்வளத் துறையினர், கியூ பிரிவு போலீசார் ,சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் கடல் பகுதியில் கடற்படை கப்பல், கடலோர பாதுகாப்பு படை கப்பல் , ரோந்து படகு மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.