கரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை. காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை. காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை. காவல்துறை வழக்கு பதிவு கரூர் மாவட்டம் கா பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஸ்வநாதபுரில் அருகே உள்ள அனைவரும் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் வயது 60 இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 53 என்பவரின் முதல் மனைவி வனிதா வயது 45 என்பது இருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காசிநாதனுக்கும் ராஜேந்திரனுக்கும் முன் விரோதம் உள்ளது இந்த நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு காசிநாதன் தனது டூவீலரில் பெரியாண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரன் அவரது மகன் குரு பிரசாத் அவரது நண்பர் மதுமோகன் ஆகியோர் காசிநாதனை இடைமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் காசிநாதனை குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக கொலையான காசிநாதனின் மகன் அஜித் குமார் வயது 29 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த காசிநாதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, ராஜேந்திரனை கரூர் மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேந்திரனின் மகன் குரு பிரசாத் மற்றும் அவரது நண்பர் மதுமோகன் ஆகியோர் தப்பி ஓடி தலைமறைவாகினர், தலைமறைவான அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.