அரசுத்துறை அதிகாரிகளுடன் எம் எல் ஏ கலந்தாய்வுக் கூட்டம்
அரசுத்துறை அதிகாரிகளுடன் எம் எல் ஏ கலந்தாய்வுக் கூட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 23 ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் கலந்தாய்வு நடத்தினார். இந்த கலந்தாய்வில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா பட்டா வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா சாலை அமைப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பெறும் வகையில் வருவாய்த்துறை வேளாண்துறை ஊரக வளர்ச்சித் துறை நெடுஞ்சாலைத்துறை மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 13 துறை அதிகாரிகளை ஒரே இடத்தில் வரவழைத்து இன்று ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கூட்ட அரங்கில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்திற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் தலைமை தாங்கினார் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் சாலை மற்றும் பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் ஊராட்சி தலைவர்களும் ஊராட்சி செயலாளர்களும் எடுத்துக் கூற அதற்கான தீர்வை அதிகாரிகள் வழங்கினர் இந்த கூட்டத்தில் ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் பேசும்போது வட்டாட்சியர் ஊராட்சி செயலாளர்களை தரம் தாழ்ந்து பேசுகிறார் என குற்றம் சாட்டினார் இது குறித்து விளக்கம் கேட்ட சட்டமன்ற உறுப்பினரிடம் சம்பவம் குறித்து வட்டாட்சியர் விஜய்காந்த் விளக்கம் கூறினார் எங்களது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தான் நான் கேள்வி கேட்க முடியும் ஆனால் இவர்களை நான் எதுவும் கூறவில்லை என தன்நிலை விளக்கம் அளித்தார் இது குறித்து விசாரித்து பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரச்சனையை சட்டமன்ற உறுப்பினர் தீர்த்து வைத்தார் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சாலை வசதி பட்டா வசதி தண்ணீர் வசதி ரேஷன் கடை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்கனவே கோரப்பட்டு அது நிலுவையில் உள்ளதாக ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர் அனைத்து பிரச்சனைகளையும் அதிகாரிகள் சரி செய்து கொடுப்பார்கள் என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உறுதியளித்தார் முன்னதாக குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து உறுதி மொழியை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வாசிக்க மற்றவர்கள் வழிமொழிந்தனர் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி தலைவர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்