விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல்!
விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல்!
பண்டிகை கால தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்கதாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) செப்டம்பர் 6, 13, 20 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) செப்டம்பர் 07, 14, 21 ஆகிய சனிக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03.35 பணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.