தென்னிலை அருகே நடந்து சென்றவர் மீது பெண் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து.
தென்னிலை அருகே நடந்து சென்றவர் மீது பெண் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து.
தென்னிலை அருகே நடந்து சென்றவர் மீது பெண் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா தென்னிலை மேல் பாகம், கூனம்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி வயது 50. இவர் செப்டம்பர் 1ஆம் தேதி இரவு 7:30- மணி அளவில், சின்ன தாராபுரம் - தென்னிலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் தென்னிலை மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, சி.கூடலூர் கீழ்பாகம் அருகே உள்ள வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி மீனாம்பாள் வயது 51 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற கிருஷ்ணசாமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணசாமிக்கு வலது கால் பாதம், கால் முட்டி பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மீனாம்பாள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.