திருப்பூரில் சுங்கச்சாவடி மையத்தை இடிக்க நேற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் இன்று நடவடிக்கையை ஒத்தி வைத்ததால் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்!
திருப்பூரில் சுங்கச்சாவடி மையத்தை இடிக்க நேற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் இன்று நடவடிக்கையை ஒத்தி வைத்ததால் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: சுங்கச்சாவடி மையத்தை இடிக்க நேற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் இன்று நடவடிக்கையை ஒத்தி வைத்தால் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம். திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் வேலம்பட்டி எனும் பகுதியில் குட்டையை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி மையம் கட்டப்பட்டுள்ளது 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சுங்கச்சாவடி மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் சுங்கச்சாவடி கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது இதனை தொடர்ந்து நேற்று விவசாயிகள் கோரிக்கையை தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டிடத்தை பிடித்து அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இன்று சுங்கச்சாவடி கட்டிடம் இடிக்கப்படும் என ஏராளமான விவசாயிகள் அப்பகுதியில் ஒன்று திரண்டு இருந்த நிலையில் பொக்லின் இந்திரம் வரவழைக்கப்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெனால்ட் ஷெல்டன் பெர்ணான்டஸ் இன்று நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் மற்றொரு நாளில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக கூறி பொக்லின் இயந்திரத்தை அப்புறப்படுத்த முயன்றார். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.