நகர திமுக வட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
பல்லடம் நகர திமுகவின் 13 வது வட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் வட்டச் செயலாளர் திரு.நாராயணன் தலைமையில் பாலாஜி நகரில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் பல்லடம் நகர கழகச் செயலாளர் ராஜேந்திரகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.திமுக முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவது,வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்தக்கூட்டத்தில் பல்லடம் நகர கழக நிர்வாகிகள்,கழக சார்பு அணியின் பொறுப்பாளர்கள்,13 வது வட்ட கழக நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.