ஜோலார்பேட்டையில் எம்எல்ஏ கையால் தான் டிராக்டரை வாங்குவேன் அடம் பிடித்து டிராக்டரை வாங்கிச் சென்ற விவசாயி.
ஜோலார்பேட்டையில் எம்எல்ஏ கையால் தான் டிராக்டரை வாங்குவேன் அடம் பிடித்து டிராக்டரை வாங்கிச் சென்ற விவசாயி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் எம்எல்ஏ கையால் தான் டிராக்டரை வாங்குவேன் அடம் பிடித்து டிராக்டரை வாங்கிச் சென்ற விவசாயி. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அக்ரி வேளாண்மை பொறியியல் துறை சார்பாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதுமிருந்து டிராக்டருக்காக விண்ணப்பத்திருந்த 9 விவசாயிகளுக்கு சுமார் ஒன்பதரை லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் 40% மானியத்தில் வழங்கப்பட்டது. அப்போது நாட் றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் வசிக்கும் குபேந்திரன் என்கிற விவசாயி அக்ரி வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில் டிராக்டரை பெற்றுக் கொண்டு வந்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜிடம் சாவியை கொடுத்து உங்கள் கையால் கொடுத்தால் தான் டிராக்டரை எடுத்து செல்வேன் என்று அடம்பிடித்து அவருக்கு மரியாதை செய்து டிராக்டரை பெற்றுக் கொண்டு சென்றார். அப்போது விவசாயின் கோரிக்கையை ஏற்று ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் டிராக்டரை சிறிது தூரம் ஓட்டி அதற்கு பின்பு விவசாயி இடம் கொடுத்த பிறகு அந்த விவசாயி நெகழ்ச்சியுடன் சென்றார்