லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உதவியாளர் கைது

குஜிலியம்பாறை அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உதவியாளர் கைது செய்து சிறையில் அடைப்பு

Update: 2024-09-05 19:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கன்னிமேக்கிபட்டி பகுதியை சேர்ந்த சரண்யா வயது 35 இவரது தந்தை கல்யாண கோனாருக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை சப் டிவிஷன் செய்து பட்டா தரும்படி குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் சரண்யா மனு செய்தார். நிலத்தை அளந்து பட்டா போட்டு கொடுக்க சர்வேயர் பாரதிதாசன் வயது 37 ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத சரண்யா லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த அறிவுரையின்படி சரண்யா வி.ஏ.ஓ., அலுவலக தற்காலிக பெண் பணியாளரும், சர்வேயர் உதவியாளருமான 7 ஆயிரம் ரூபாய் பணத்தை சுதாவிடம் கொடுத்தார். பிறகு அங்கு வந்த சர்வேயர் பாரதிதாசன் அப்பணத்தை பெற்றார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார் சர்வேயர் பாரதிதாசன், மற்றும் அவரது உதவியாளர் சுதா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சர்வேயர் பாரதிதாசனை திண்டுக்கல் மாவட்ட சிறையிலும் உதவியாளர் சுதாவை நிலக்கோட்டை பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

Similar News