காவல் பயிற்சிப் பள்ளி சார்பில் ஆசிரியர் தின விழா!
காவல் பயிற்சிப் பள்ளி சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது
தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேரூரணி காவல் பயிற்சிப் பள்ளி சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோ.எலியாஸ் தலைமை வகித்தார். பேரூரணி காவல் பயிற்சிப் பள்ளியின் துணை முதல்வர் சகாய ஜோஸ் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்களிடையே 'எழுத்தறிவித்தவன் இறைவன்'' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, "அறப்பணியாம் ஆசிரியர் பணி" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக முதன்மை சட்டப் போதகர் பாலியல் தொந்தரவுகள் குறித்த விழிப்புணர்வுடன் கலந்த அறிவுரை வழங்கி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கா.சரவணக்குமார் தொகுத்து வழங்கினார். விழாவில் காவல் பயிற்சிப் பள்ளி, முதன்மை சட்ட போதகர், முதன்மை கவாத்து போதகர், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.