மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது!
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருதினை பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.
சென்னையில் ஆசிரியர் தினத்தையொட்டி, சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் 386 பேருக்கு தமிழக அரசு சார்பில் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ எனும் பெயரில் மாநில நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி கவுரவித்தார். இதில், தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பே.இரா.மேரிபியூலாக்கு விருது வழங்கப்பட்டது.