தூய்மையான அவர்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு
எனது குப்பை எனது பொறுப்பு என உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவர்கள்
பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பல்லடம் நகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் தீவிரத் தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இறுதியில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்