தமிழக வெற்றி கழக மாநாடு பதில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்

காவல்துறையினரின் கேள்வியை தொடர்ந்து பதில் மனு

Update: 2024-09-06 16:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில் வருகின்ற 23ஆம் தேதி நடத்துவதற்கு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அனுமதி கோரி கடந்த 28 ஆம் தேதி மனு அளித்தனர்.தமிழக வெற்றிக்கழகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட மனுவில் மாநாடு ஏற்பாடுகள் குறித்து குறிப்பிடவில்லை என்பதால் மாநாடு நடத்துவதற்கு நடைமுறை விளக்கங்களாக 21 கேள்விகள் எழுப்பபட்டு கடந்த 2 ஆம் தேதி பதிலளிக்க அக்கட்சியின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டன. அவகாசம் கொடுக்கப்பட்டு இன்று 5 நாட்கள் முடிவடைவதால் 21 கேள்விகளுக்கு விளக்கமளித்து அக்கட்சியின் நிர்வாகிகள், விழுப்புரம் விஓசி தெருவில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுசெயலாளர் என்.ஆனந்த்,டிஎஸ்பி சுரேஷிடம் பதில் அளித்துள்ளனர்.காவல் துறையினர் பதில்களை ஆராய்ந்து மாநாட்டிற்கான அனுமதி கொடுப்பது தெரியவரும்.

Similar News