புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக்கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம், கலெக்டர் அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன்,முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.