பொன்னமராவதி அருகே உள்ள கருப்புகுடிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் முருகன் தலைமையில் 107 மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. முதலில் பள்ளி தலைமை ஆசிரியர் புவியரசன் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்களும் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.