கலைஞர் நுாற்றாண்டு போட்டித் தேர்வு - அமைச்சர் வாழ்த்து
காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிட உணவுத்துறை அமைச்சர் வாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார்
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-2 மற்றும் 2ஏ தேர்வினை எழுத உள்ள தேர்வர்களை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் சந்தித்து, தேர்வுக்கூட அனுமதி சீட்டினை வழங்கி, தேர்வினை சிறந்த முறையில் எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிட வாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, இளைஞர்களின் அரசுப் பணி என்ற உயரிய இலட்சியக் கனவினை நினைவாக்கிடும் வகையிலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் நகரம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு தகுதியுடனும் அதிகமானோர் பங்கேற்றிட வழிகாட்டிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக 27.02.2024 அன்று துவக்கி வைத்தார்கள் தையரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். எண்ணங்கள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். தன்னபிக்கை, விடா முயற்சி, உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம். இந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் உயர் பதவிகள் வகித்து வருகின்றனர். அதேபோல், இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் நன்றாக பயிற்சி பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் அரசுப் பணிகளுக்கு சென்று மக்கள் சேவை ஆற்றிட வேண்டும். அப்போதுதான், கிராமப்புற மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி மையத்தை நாடி பயன்பெற ஊக்கம் ஏற்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டம் துணை ஆட்சியர் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபுபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.