திருப்பத்தூரில் விநாயாகர் சதுர்த்தி கொண்டாட்டம்

திருப்பத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாட்டம்

Update: 2024-09-07 06:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழக்கடை பஜாரில் அமைந்திருக்கும் சுயம்பு வடிவிலான மாயப்பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம் நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழக்கடை பஜாரில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாய பிள்ளையார் கோவிலில் இன்று சுயம்பு வடிவிலான மாய பிள்ளையாருக்கு சிறப்பு ஆராதனை மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் நகரவாசிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து திருப்பத்தூர் ஜின்னா ரோடு பகுதியில் விநாயகர் சிலை மற்றும் விநாயகருக்கு இஷ்டமான பூக்கள் ,பழங்கள், எருக்கம் பூவாளான மாலைகள், அருகம்புல் மாலை, உள்ளிட்டவையும் பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைத்தனர். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை மற்றும் விநாயகருக்கு இஷ்டமான பொருட்களும் விற்பனை கலைகட்டியது குறிப்பிடத்தக்கது.

Similar News