விநாயகர் சதுர்த்தி கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்.
விநாயகர் சதுர்த்தி கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்.
விநாயகர் சதுர்த்தி கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சித்தி விநாயகருக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர்,கரும்புச்சாறு,பஞ்சாமிர்தம்,திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தங்க காப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர் காட்சியளித்தார். அப்போது கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியினை விஸ்வகர்மா சித்தி விநாயகர் அறங்காவலர் குழு மற்றும் அறக்கட்டளை சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.