வரம் தரும் கனி விநாயகருக்கு சிறப்பு பாலாபிஷேகம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சின்னாளபட்டி வரம் தரும் கனி விநாயகருக்கு சிறப்பு பாலாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் வள்ளுவர் நகரில் வரம் தரும் கனி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்வது வழக்கம். இவ்வருட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கடைவீதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தனர். அங்கு பெண்கள் கொண்டு வந்த பால் குடங்களுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்பு பால் ஊற்றப்பட்டது. அதன்பின்னர் தீபாராதனை காண்பித்தபின்பு பெண்கள் பால்குடங்களை சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தின் முன்பு பெண் குழந்தைகள் பால்குடங்களை சுமந்து வர அதன்பின்னர் மற்றவர்கள் பால் குடங்களை சுமந்தவாறு கோவிலுக்கு வந்தனர். ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு செக்காபட்டி, மேட்டுப்பட்டி, திருவள்ளுர் சாலை, மேட்டுப்பட்டி சேவா சங்கம் வழியாக கோவிலை வந்தடைந்தவுடன் சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் பக்தர்கள் சுமந்து வந்த பால்குடங்களில் இருந்து பால் எடுக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் பொதுமக்கள் சார்பாக பொங்கல் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. விநாயக பெருமானை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அவல், சுண்டல். தேங்காய், வாழைப்பழம், பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. சுவாமிக்கான அலங்காரத்தை கோவில் குருக்கள் முத்துக்குமார் சிறப்பாக செய்திருந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் செல்வராஜ் தலைமையில் கோவில் கமிட்டி தலைவர் ராமநாதன் தலைமையிலான விழா கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு லைன் தெரு பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது விழாவில் ஐந்தரை அடி கொண்ட வீர விநாயகர் சிலை வைக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது பின்னர் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஏந்தியவாறு விநாயகர் வீதி உலா நடைபெற்றது ஊர்வலமானது 11-வது வார்டுக்கு உட்பட்ட லைன் தெரு பகுதிகளில் ஊர்வலமாக வந்தது இவ்விழா பாரதிய ஜனதா கட்சி முன்னாள் பட்டியல் அணியின் மாவட்ட துணை தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.