சாலை விபத்தில் சிக்கியவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நாமக்கல் எம்பி!

நாமக்கல் எம்பியின் இந்த மனிதாபிமானம் செயலை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் எம்பிக்கு நன்றியையும்,பாராட்டும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Update: 2024-09-08 13:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல்- பரமத்தி சாலை வள்ளிபுரம் அசோக் லேலண்ட் எதிர்புறம் காரில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தவர்களை 4 பேரை உடனடியாக மீட்டு, அவர்களை ஆம்புலன்ஸில் நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி, மேலும், அரசு மருத்துவக்கல்லூரி டீன்-இடம் பேசி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று தொலைபேசியில் பேசினார்.நாமக்கல் எம்பியின் இந்த மனிதாபிமானம் செயலை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் எம்பிக்கு நன்றியையும், பாராட்டும் தெரிவித்தனர்.

Similar News