ராசிபுரத்தில் அரச மரத்து செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஏராளமானோர் சாமி தரிசனம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அசத்தல்.
ராசிபுரத்தில் அரச மரத்து செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஏராளமானோர் சாமி தரிசனம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அசத்தல்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் சி பி கன்னையா தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அரசமரத்து செல்வ விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் ,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் முறுக்கு போட்டி ,பன் சாப்பிடும் போட்டி, பலூன் உதும் போட்டி, பாட்டிலில் நீர் நிரப்பும் போட்டி, பாட்டு போட்டி ,பானை உடைத்தல் போட்டி போன்ற பல்வேறு கலாச்சார விளையாட்டுகள் நடத்தப்பட்டது. இதில் ஆர்வமாக பெரியவர்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் இக் கோவிலுக்கு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் மாநில வனத்துறை அமைச்சருமான மருத்துவர் மா.மதிவேந்தன், மற்றும் ராசிபுரம் நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர், திமுக நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், மற்றும் நாயுடு சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் மணி, துணைத் தலைவர் சிட்டி வரதராஜ், கோவில் நிர்வாகிகள் தமிழ் செல்வன், விக்கி, மனோஜ்குமார், ஹரி ராகவேந்திரா, வினோத் குமார், தரணி பாபு, யோகராஜா, விஜயகுமார், சசிகுமார், கெளதம்,நிர்மல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். மேலும் அமைச்சர் மதிவேந்தன் அவர்களிடம் நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசி மனுவும் அளித்தனர்.