விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்லடத்தில் 250 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்நிலையில் பல்லடத்தின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன அதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது