திண்டுக்கல்லில் அடுக்குமாடி குடியிருப்புக்கு 'சீல்'
திண்டுக்கல்லில் அடுக்குமாடி குடியிருப்புக்கு 'சீல்'
திண்டுக்கல் மாநகராட்சியில் அனுமதியை மீறி கூடுதலாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திண்டுக்கல்லை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் எம்.வி.எம்.நகர் 7 வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் கட்ட தொடங்கினார். 2 மாடி அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதாக திண்டுக்கல் மாநகராட்சியில் அனுமதி பெற்று கூடுதலாக 3வது மாடியில் 5 குடியிருப்புகளை கட்டினார். திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, குடியிருப்புக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் பொறியாளர்கள் சுப்பிரமணியன்,சரவணக்குமார்,மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா உள்ளிட்ட அதிகாரிகளால் 3 வது மாடியில் உள்ள 5 குடியிருப்புகளுக்கு சீல் வைக்கப்பட்டது.