செல்லப் பிராணிகள் திருட்டு அதிகரிப்பு: சிசிடிவி காட்சிகள்
தூத்துக்குடியில் வீடுகளில் வளர்க்கப்படும் விலை உயர்ந்த வெளிநாட்டு வகை செல்லப் பிராணிகளை சிறுவர்களை வைத்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் நாய் பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்போர் தங்கள் வீடுகளில் உள்ள ஒருவரை போன்று செல்லப் பிராணிகளை வளர்ப்போர் மிகுந்த பாசத்துடன் குழந்தையை பாதுகாப்பது போன்று அதற்கான தனி அறை உணவுகள் மருத்துவ வசதி என வளர்த்து வருகின்றனர் இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு காட்டன் தெரு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் வீட்டில் விலை உயர்ந்த வெளிநாட்டு வகையை சேர்ந்த பக்(pug) என்ற நாயை தங்கள் குழந்தையை போல் வளர்த்து வந்துள்ளனர் நேற்று தங்கராஜின் வீட்டிற்கு வெளியே நாய் நின்று கொண்டிருந்தள்ளது சிறிது நேரத்தில் நாய் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதை அடுத்து வீட்டில் மாட்டி இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். இதில் அந்தப் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் முதியவர் ஒருவருடன் வந்த சிறுவன் வீட்டின் வெளியே தனியாக நின்றிருந்த நாயை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாசமாக வீட்டில் குழந்தையை போல் வளர்த்த நாயை பறிகொடுத்த தங்கராஜ் குடும்பத்தினர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் நாயை கண்டுபிடித்து தரும்படி சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் வழங்கி புகார் அளித்துள்ளனர்.