மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சா.உமா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-09-09 12:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 468 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தின் கீழ் எலந்தக்குட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தண்ணீர் பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் வெள்ளபிள்ளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட 3 அரசு பள்ளி சத்துணவு மைங்களுக்கு ஐ.எஸ்.ஓ (ISO) தரச்சான்றிதழ்களை வழங்கினார். மேலும், 24.11.2020 அன்று காவேரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செல்வன். யோகேஷ் அவர்களின் தந்தை திரு.ந.பழனிவேல் அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். மேலும், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மோகனூர் வட்டம், குட்லாம்பாறையை சேர்ந்த மாணவன் கி.ஸ்ரீ அபினேஷ் அவர்களுக்கு முதலமைச்சரின் உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.50,000/- உதவித்தொகையும், கூட்டுறவு துறை சார்பில் 10 நபர்களுக்கு ரூ.11.13 இலட்சம் மதிப்பில் பயிர் கடன்களை வழங்கினார்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுவை பெற்று கொண்டார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், உதவி திட்ட அலுவலர் திருமதி ஜெ.புவனேஸ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News