புன்னம் சத்திரம் மயானம் அருகே இரவு நேரத்தில் சாலையைக் கடந்த முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து.
புன்னம் சத்திரம் மயானம் அருகே இரவு நேரத்தில் சாலையைக் கடந்த முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து.
புன்னம் சத்திரம் மயானம் அருகே இரவு நேரத்தில் சாலையைக் கடந்த முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புன்னம் சத்திரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு வயது 38. செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில், 50 வயது மதிக்கத்த ஆண் ஒருவர் புன்னம்சத்திரம் மயானம் அருகே சாலையை கடந்து நடந்து சென்றுள்ளார். அப்போது அதே சாலையில், திண்டுக்கல் மாவட்டம்,டிப்போர்ட் ரோடு, பாரதபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் வயது 39 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூவீலர் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து அடையாளம் தெரியாத நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருநாவுக்கரசுக்கு அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு புகார் அளித்தார். காயம் பட்ட நபரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இது தொடர்பாக, டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய செல்வம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.