அன்னவாசல் அருகே உணவக உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பொன்னமராவதி அடுத்துள்ள கொன்னபட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் விஸ்வநாதன் (49). திருமணமான இவருக்கு மனைவி, இரண்டு பெண், ஒரு ஆண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவர், தனது மாமனார் ஊரான அன்னவாசல் அடுத்துள்ள காலாடிபட்டியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், குடும்பத்தினருடன் கருத்துவேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் உணவகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த அன்னவாசல் போலீஸார் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.