கீரனுார்: கீரனூர் அருகே உள்ள வாலியம்பட்டியை சேர்ந்தவர் பழனிவேலு மகள்கலைச்செல்வி (18) பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், உறவினர் ஒருவரை காதலிப்பதால், திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தினார். கல்லுாரி படிப்பு முடித்ததும் திரு மணம் செய்து வைப்பதாக பெற்றோர் தெரிவித்த னர். இதனால் மனமுடைந்தகலைச்செல்வி நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்தபோது, வீட்டு உத்திரத்தில் தூக்குமாட்டி கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் கலைச்செல்வி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை மீட்டனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீர னுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.