வளர்ச்சித்திட்டங்கள்: துறைமுக நிர்வாகத்திடம் மேயர் கோரிக்கை
வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக வஉசி துறைமுகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை மனு அளித்தார்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஆய்வு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் ஜெகன் துறைமுக சபை தலைவரிடம் மாநகராட்சி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கோரிக்கை மனுவாக வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியில் துறைமுக நிர்வாகம் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்