ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் துவக்கம்

ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் துவக்கம்

Update: 2024-09-10 14:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராசிபுரம் சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் ரோட்டரி சங்கத்தின் இன்ட்ராக்ட் கிளப் 2024-25 ஆண்டிற்கு துவங்கப்பட்டது. இதில் முன்னதாக பள்ளியின் தாளாளர் ரோட்டேரியன் S சத்தியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் M முருகானந்தம் தலைமை வகித்தார். 2023-24-ம் ஆண்டு இன்ட்ராக்ட் கிளப் மாணவி பேபிகா வரவேற்புரையாற்றி கடந்த ஆண்டு அறிக்கையை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்ட இன்ட்ராக்ட் பொறுப்பாளர் சுவாதி, ராசிபுரம் ரோட்டரி கிளப் இன்ட்ராக்ட் பொறுப்பாளர் எஸ்.கதிரேசன் ஆகியோர் இன்ட்ராக்ட் கிளப் முக்கியத்துவம் பற்றி பேசினர். பள்ளி முதல்வர் D.வித்யாசாகர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் புதியதாக பொறுப்பேற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துப் பேசினர். பள்ளியின் புதிய இன்ட்ராக்ட் கிளப் தலைவராக தேஜா, செயலராக தேன்தமிழ், பொருளாளராக தாரணிஷ் ஆகியோர் இன்ட்ராக்ட் பின் அணிவிக்கப்பட்டு பொறுப்பேற்றனர். இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு கலை நிகழ்சசிகளும் நடைபெற்றன. விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், இ.என்.சுரேந்தின், ஆர்.திருமூர்த்தி (எ) ரவி, பி.கண்ணன், ராஜா, எல்.சிவக்குமார், ஜி.தினகர் உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News